உயர்கல்வி, பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடு: அன்புமணி ராமதாஸ் ஆளுநரிடம் புகார் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 9 December 2017

உயர்கல்வி, பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடு: அன்புமணி ராமதாஸ் ஆளுநரிடம் புகார்

ஆளுநரிடம் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் புகார் அளித்தார். அதில் பல்வேறு அரசுத்துறைகளில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.அவரது புகாரில் உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை முறைகேடுகள் குறித்து அன்புமணி ராமதாஸ் அளித்துள்ள அறிக்கை:
“உயர்கல்வித்துறை ஊழல்கள்:

துணைவேந்தர், ஆசிரியர் நியமன ஊழல்”தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி குறித்தும், சமூக, பொருளாதார, அறிவியல் வளர்ச்சி குறித்தும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டிய பல்கலைக்கழகங்கள் ஊழல் வளர்ச்சிக்கு உதாரணங்களாக மாறி வருகின்றன. ஆட்சியாளர்கள்தலைவணங்கும் அளவுக்கு கல்வியாளர்களாக திகழ்ந்த ஆற்காடு லட்சுமணசாமி முதலியார், நெ.து. சுந்தரவடிவேலு உள்ளிட்டோர் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக பணியாற்றிய நிலை மாறி, கல்வி குறித்தும், நிர்வாகம் குறித்தும் எதுவும் அறியாதவர்கள் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக நியமிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய ஆளுனரிடம் புகார் மனு கொடுத்த பிறகு இன்று வரை சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகிய 10 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் நியமனத்திற்காக குறைந்தபட்சம் ரூ.3 கோடி முதல் ரூ.20 கோடி வரை கையூட்டாக பெறப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவர்களில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பி.பி. செல்லத்துரை அப்பதவிக்கு தகுதியற்றவர் என்றும், ஆட்சியாளர்கள் சார்பில் தேர்வுக்குழு அமைப்பாளர் முருகதாஸ் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவரது பெயரை பரிந்துரைத்ததாக தேர்வுக்குழு உறுப்பினர்களான ஹரிஷ்மேத்தா, இராமகிருஷ்ணன் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதை ஆளுனர் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.அதேபோல், மருத்துவத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகளில் சோதனை நடத்திய வருமானவரித்துறையினர் மருத்துவப் பல்கலைத்துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டிலும் சோதனை நடத்தியதுடன், நேரில் அழைத்தும் விசாரணை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள13 பல்கலைக்கழகங்களில் மட்டும் கடந்த இரு ஆண்டுகளில் பல்வேறு நிலைகளில் சுமார் 800 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன.உதவிப் பேராசிரியர் பணிக்கு ரூ.30 லட்சம், இணை பேராசிரியர் பணிக்கு ரூ.40 லட்சம், பேராசிரியர் பணிக்கு ரூ.55 லட்சம் வீதம் கையூட்டு பெறப்பட்டிருப்பதாகவும், இவ்வகையில் மட்டும் ரூ.320 கோடி ஊழல் செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. பல்கலைக்கழக துணைவேந்தர்கள், ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

பல்கலைக்கழக கட்டுமான ஊழல்:

தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் 13 பல்கலைக்கழகங்களில் கடந்த இரு ஆண்டுகளில் ரூ.400 கோடி மதிப்புள்ள கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2015-16-ம் ஆண்டில் ரூ.91.72 கோடிக்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.பல்கலைக்கழகங்களுக்கு தேவையான உபகரணங்கள், தேர்வுக்கான எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்முதல் செய்வதிலும் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடந்துள்ளன. பல்கலைக் கழகங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்கள் பற்றி விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை ஊழல்கள்:

தனியார் பள்ளிகள் முறைகேடு ஊழல்:உயர்கல்வித்துறைக்கு சற்றும் குறைவில்லாத வகையில் பள்ளிக் கல்வித்துறையிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.10 லட்சம் வரையிலும், அங்கீகாரத்தை புதுப்பிக்க ரூ.4 லட்சமும் கையூட்டாக வசூலிக்கப்படுகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாறுவதற்கான ஆட்சேபமின்மை சான்றிதழ் வழங்க ரூ.40 லட்சம் கையூட்டாக வசூலிக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட பள்ளிகள் இவ்வாறு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாறியுள்ளன. அனைத்து பள்ளிகளிடமிருந்தும் கையூட்டு பெறப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் வரலாறு காணாத வகையில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டன. ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் வசூலித்தன. அதற்கு வசதியாக தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான அரசு குழுவின் தலைவராக இருந்த நீதிபதி சிங்காரவேலு கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், 15 மாதங்களுக்குப் பிறகு 22.03.2017 அன்று - தான் கட்டண நிர்ணயக் குழுவின் புதிய தலைவராக நீதிபதி டி.வி. மாசிலாமணி நியமிக்கப்பட்டார்.அவர் தலைமையில் கட்டண நிர்ணயக் குழு புதியக் கட்டணத்தை நிர்ணயிக்காததால் கடந்த இரு ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் எல்லையில்லாமல் கட்டணக் கொள்ளையை நடத்தின. இதற்கு வழி வகுத்துக் கொடுத்ததற்காகவும், கண்டுகொள்ளாமல் இருந்ததற்காகவும் ஆட்சியாளர்களுக்கு கோடிக்கணக்கில் கையூட்டு வழங்கபட்டதாக கூறப்படும் குற்றச்சாற்று குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

பணி நியமன, பணியிடமாற்ற ஊழல்கள்:

உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு பேராசியர்களை நியமிப்பது போன்று அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய முடியாது என்பதாலும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே தகுதி மற்றும் போட்டித்தேர்வு நடத்தி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதாலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் நடக்க வாய்ப்புகள் இல்லை. அதேநேரத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை காலியாகும் போது, அதை தகுதியுடையவர்களைக் கொண்டு நிரப்புவதற்காக பள்ளி நிர்வாகங்களிடமிருந்து ஒரு பணியிடத்திற்குரூ.20 லட்சம் வரை கையூட்டாக பெறப்படுகிறது.கடந்த இரு ஆண்டுகளில் இவ்வாறு கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. ஆசிரியர்கள் இடமாறுதலுக்காக கவுன்சலிங் நடத்தப்படும் போது அதில் முறைகேடு நடப்பதில்லை. மாறாக நிர்வாக இடமாறுதல் என்றபெயரில் இடமாற்றம் செய்யப்படும் போது ஒரு இடமாற்றத்திற்காக ரூ.5 லட்சம் வரை கையூட்டுவாங்கப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளில் குறைந்தது 2000 பேருக்கு நிர்வாக ஒதுக்கீடில் இடமாறுதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. கோடிக்கணக்கில் ஊழல்கள் நடந்துள்ளன. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு மேதகு ஆளுனர் அவர்கள் ஆணையிட வேண்டும்.”இவ்வாறு அவர் புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot