ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 15 - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 23 December 2017

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 15

*  விற்பூட்டுப்பொருள் கோளை பூட்டுவிற் பொருள்கோள் எனவும் கூறுவர்.

*  ஊஞ்சல் கயிறு போல முன்னும் பின்னுமாகப் பொருள் கொள்வது தாப்பிசை பொருள்கோள் ஆகும்.


*  தாப்பிசை என்பதும் தாம்பு+இசை எனப் பிரியும். (தாம்பு + ஊஞ்சல் கயிறு)

*  செய்யுளின் ஈற்றபியைப் பாடலின் பாடலின் முதலில் கொண்டு பொருள் கொள்ளுதல் அளைமறிபாப்புப் பொருள்கோள் ஆகும். (அளை-புற்று, பாப்பு-பாம்பு)

*  செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருத்துவது - பூட்டுவிற் பொருள்கோள் ஆகும்.

*  பல அடிகளிலும் உள்ள சொற்களை மாற்றிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆகும்.

*  செய்யுள் அடிகளை முன் பின்னாக மாற்றினாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது அடிமறிமாற்றுப் பொருள்கோள்.

*  உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்பதற்கு சான்று பந்து+ஆட்டம் (பந்தாட்டம்)

*  டகர, ரகரக் குற்றியலுகரப் புணர்ச்சிக்குச் சான்று காடு+கோழி, ஆறு+பாலம்

*  மொழி மூவகைப்படும். ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது தனி மொழி

*  தொடர் மொழிக்கு சான்று படம் பார்த்தான்.

*  தனி மொழிக்கும், தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி

*  வினைமுற்று(முற்றுவினை) இரு வகைப்படும்.

*  "செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பவன் ஆறும் தருவது வினையே" - இதில் "வினையே" என்பது தெரிநிலை வினைமுற்றை உணர்த்தும்.

*  வினைமுற்றின் விகுதி குறைந்து நிற்கும் சொல் எச்சம். எச்சம் இரு வகைப்படும்.

*  ஓர் எச்சவினை பெயரைக் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும்.

*  பெயரெச்சம் கால வகையில் மூன்று வகைப்படும்.

*  பெயரெச்ச வாய்ப்பாடுகள் செய்த, செய்கின்ற, செய்யும்.

*  முக்காலத்தையும் செயலையும் வெளிப்படையாகக் காட்டும் பெயரெச்சம், தெரிநிலைப் பெயரெச்சம்(வந்த பையன்)

*  பண்பினை மட்டும் உணர்த்தி பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் குறிப்புப் பெயரெச்சம்(நல்ல பையன்)

*  ஓச்ச எச்சவினை, வினையைக் கொண்டு முடிந்தால் அது வினையெச்சம் எனப்படும் (படித்து வந்தான்)

*  வினையெச்சம் இருவகைப்படும். காலவகையால் மூவகை.

*  மடித்து வந்தான் - இறந்தகால வினையெச்சம்

*  படித்து வருகிறான் - நிகழ்கால வினையெச்சம்

*  படித்து வருவான் - எதிர்கால வினையெச்சம்

*  காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை தெரிநிலை வினையெச்சம்(படித்துத் தேறினான்)

*  காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல் பண்பினை உணர்த்தி நின்று வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சம் குறிப்பு வினையெச்சம்(மெல்ல பேசினான்)

*  ஒரு வினைமுற்றுச் சொல் எச்சப்பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம்.

*  ஒரு பொதுச்சொல் முன்பின் சேர்ந்து வரும் சொல்லின் குறிப்பால் ஒரு பாலை நீக்கி மற்றொரு பாலைச் சுட்டுவது ஒன்றொழி பொதுச்சொல் என்பது பெயர். (வீட்டின் முன் ஐவர் கோலமிட்டனர்)

*  ஒரு சொல் தன் பொருளையும் குறித்துத் தனக்கு இனமான பொருளையும் குறித்து வருவது இனங்குறித்தல் எனப்படும். (வெற்றிலை தின்றாள்)

*  ஒரு சொல் இரண்டு, மூன்று, நான்குமுறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்.

*  இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்தியைசா நன்னூல்

*  இசை, குறிப்பு, பண்பு பற்றி வருவது இரட்டைக்கிளவி

*  விரைவு, அச்சம், வெகுளி, மகிழ்ச்சி பற்றி வருவது அடுக்குத் தொடர்.

*  இளவழகன் வந்தான் இது வெளிப்படை தொடர்.

*  மாடு என்னும் சொல் அஃறினைப் பொதுப்பெயர் ஆகும்.

*  மாடு கன்றை ஈன்றது இத்தொடரில் மாடு என்பது பசுவைக் குறிக்கும். மாடு பால் கறந்தது என்பது குறிப்புச் சொல்.

*  வினா ஆறு வகைப்படும்.

*  திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் கேட்பது அறிவினா

*  நன்னூலை இயற்றியவர் யார்? மாணவர் ஆசிரியரைக் கேட்பது அறியாவினா

*  பாம்போ? கயிறோ? - ஐயவினா

*  பருப்பு உள்ளதா? என வணிகர்களிடம் கேட்பது கொளல்வினா

*  மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? -  கொடைவினா

*  முருகா சாப்பிட்டாயா? - ஏவல்வினா

*  வினாவிற்கு ஏற்பட விடையளிப்பதுதான் மொழி நடையின் சிறப்பு

*  விடை எட்டு வகைப்படும்.(இறை, செப்பு, பதில் என்பன விடையின் வேறு பெயர்கள்)

*  இது செய்வாயா? எனில் செய்யேன் எனபது மறைவிடை

*  இது செய்வாயா? எனில் செய்வேன் என்பது நேர்விடை

*  இது செய்வாயா? எனில் நீயே செய் என்பது ஏவல்விடை

*  இது செல்வாயா? எனில் செய்யாமல் இருப்பேனோ என்பது வினாஎதிர் வினாதல் விடை

*  இது செய்வாயா? எனில் உடம்பு நொந்தது என்பது உற்றுதுரைத்தல்

*  இது செய்வாயா? எனில் கை வலிக்கும் என்பது உறுவது கூறல் விடை

*  ஆடுவாயா? எனில் பாடுவேன் என்பது இனமொழி விடை

*  ஒரு பொருள் குறித்து வரும் சொற்களையே ஒருபொருட் பன்மொழி

*  ஒரு பொருட் பன்மொழிக்கு சான்று நடுமையம்

*  தேன் போன்ற மொழி என்பது விரியுவமை. தேன்மொழி - தொகை உவமை

*  ஒரு பொருள்ளை அதனை விடச் சிறந்த மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமை எனப்படும்.

*  உவமானத்தையும், உவமேயத்தையும் வேறுப்படுத்தாது. இரண்டும் ஒன்றே என்பது உருவகம்.

*  வடக்கு என்னும் திசை பெயரோடு பிற திசைகள் வந்து சேரும்போது நிலைமொழி ஆறும் மெய்யும் நீங்கும்.

*  மேற்கு+நாடு என்பது மேனாடு எனச் சேரும்.

*  கருமை+குழி என்பது ஈறுபோதல், இனமிகல் எனும் விதிகளின்படி புணரும்.

*  அடிஅகரம் ஐ ஆதல் - பைங்கூழ்

*  ஆதி நீடல் - மூதூர்

*  இனமிகல் கரும்பலகை, தன்னொற்றிரட்டல் வெற்றிலை

*  மரம்+அடி என்பது மரவடி எனச் சேரும்.

*  வட்டக்கல் என்பது மகர ஈற்றுப் புணர்ச்சி

*  பொருள் என்பது ஒழுக்கமுறை பொருள் இலக்கணம் இரு வகைப்படும்.

*  அன்புடைய தலைவன், தலைவி பற்றிய ஒழுக்கத்தினை கூறுவது அகத்தினை எனப்படும். அகத்தினை ஏழு வகைப்படும்.

*  அகப்பொருளுக்குரிய பொருள்கள் மூன்று

*  நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.

*  அகம், புறம் ஆகிய இரண்டும் பொருள் இலக்கணம்.

தொடரும்...

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot