ஆக., 22ல் ஒரு நாள் ஸ்டிரைக்: ஜாக்டோ - ஜியோ முடிவு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 25 July 2017

ஆக., 22ல் ஒரு நாள் ஸ்டிரைக்: ஜாக்டோ - ஜியோ முடிவு

ஆக., 22ல், ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின், கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ மீண்டும், போராட்டத்தை துவங்கி உள்ளது.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பளத்தை உயர்த்தவும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவும், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 இந்த கோரிக்கைளை வலியுறுத்தி, ஜூலை, 18ல் ஆர்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, நேற்று, சென்னையில் சங்க நிர்வாகிகள் கூடி, ஆலோசனை நடத்தினர்.முடிவில், ஆக., 5ல், கோட்டை நோக்கி பேரணி, ஆக., 22ல் ஒருநாள் வேலைநிறுத்தம், செப்., 7 முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot